மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டில் பதிவாகியிருக்கும் வாக்குகள் ஒத்துபோகா விட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாளைய தினம் வாக்கு எண்ணிக்கையின் போது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் வாக்குகளும் எண்ணப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்பீட்டு பார்க்கப்படும். இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் வாக்குகளும் ஒத்துபோகா விட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னையை சேர்ந்த லட்சுமி கிருபா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு, நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளநிலையில் தாமதமாக மனு தாக்கல் செய்திருப்பதாக கூறி லட்சுமி கிருபாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.