மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி மாற்றப்படுமா?: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மதுரை சித்திரை திருவிழாயொட்டி, நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், பார்த்தசாரதி என்பவர், மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்றும் மதுரை மக்களின் வசதிக்காக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

Exit mobile version