ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து தனது கருத்தை தெரிவித்த உயர்நீதிமன்றம், ஊழல் செய்யும் நீதித்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஊழல் செய்யும் அதிகாரிகளால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாகவும் தனது கருத்தை பதிவிட்டுள்ளது.

Exit mobile version