வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வல்லூர் தேசிய அனல்மின் நிலையம் மூடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல் மின்நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் வீதம் 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வல்லூர் தேசிய அனல் மின்நிலைய நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நிலத்தில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட தடை விதித்தனர். மேலும், வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. அனுமதியை புதுப்பிப்பதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து ஆலை இயங்கி வந்துள்ளதாக கூறிய நீதிமன்றம், ஆலை தொடர்ந்து செயல்படவும் தடை விதித்தது. இதனையடுத்து வல்லூர் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

Exit mobile version