விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டிடத்தை, வரைமுறைப்படுத்த அனுமதி கோரி, ராஜேஷ் ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

மேலும், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வரைமுறைப்படுத்தக் கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறி, தனியார் மருத்துவமனையின் மனுவை முடித்து வைத்தனர்.

Exit mobile version