தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தொடரலாம் என்றும் உயர் நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது எனவும் தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, நடிகர் சங்கத்துக்கு எதிரான விஷால் தரப்பின் மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version