2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் மெட்ரோ அமைக்கப்படும் என்றும் அதற்காக 8500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தினைப் பற்றி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மெட்ரோ ரயில் திட்டத்தில் மாசி வீதிகளில் பாரம்பரியமிக்க தேரோட்டம் நடைபெறும் இடங்களில் இடையூறு இல்லாமல் செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.
யானைக்கல் முதல் பெரியார் வரை உயர்மட்ட மேம்பாலமும், மெட்ரோ ரயில் திட்டமும் ஒரே இடத்தில் வருவதால் குழப்பம் நிலவுகிறது என்றும் இதற்கு தமிழக அரசு உரிய விளக்கங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post