மதுரை மாவட்டத்தில் தொண்டர்படை சூழ நடைபெற உள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இலச்சினையானது வெளியிடப்பட்டது. இந்த இலச்சினையை கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். உடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கின்ற கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள மாநாட்டில் கர்நாடகா மாநில அதிமுக சார்பில் ஏராளம்பூர் பங்கேற்பது என முடிவெடுத்திருப்பதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் குமார் தெரிவித்துள்ளார் .
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சென்னையில் உள்ள அ இ அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக மாநில அஇஅதிமுக மாநில செயலாளர் குமார் கலந்து கொண்டார். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமார் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கின்ற பிரம்மாண்டமான எழுச்சி மாநாட்டில் கர்நாடகா மாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவது என உறுதி தெரிவித்திருக்கிறார்.
விடியா ஆட்சியை அகற்றுவதற்கு அந்த மாநாடு ஒரு சாட்சியாக இருக்கும் . எடப்பாடியார் தலைமையில் கர்நாடகா மாநிலத்தில் பல தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று கட்சியினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவிப்பார். அதற்கு கர்நாடக மாநில ஆகிய அதிமுக கட்டுப்படும் அவருடைய முடிவே இறுதி முடிவு என குமார் தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் மதுரை மாநாடு மிகப் பிரமாண்டமானதாக ஒரு திருப்ப முனையை ஏற்படுத்தக் கூடிய மாநாடாக அமையும் அதில் தமிழக மக்கள் மட்டுமில்ல ஒட்டுமொத்த மக்களும் அண்ணன் எடப்பாடியார் தலைமையை ஏற்க கூடிய நிகழ்வாக அந்த மாநாடு இருக்கப்போகிறது என குமார் தெரிவித்தார்.