முதலில் கூரை ஏறி கோழி பிடிங்க மா.சு!

திருப்பூர்ல அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்துவைத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, திருப்பூர், நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள்ல, மத்திய அரசின் ஒப்புதலோடு செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று  சொல்லியிருந்தார். ஏற்கனவே, தேர்தல் வாக்குறுதியில மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முக ஸ்டாலின் சொன்னார். 2 வருட ஆட்சியில் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் புதியதாக தொடங்கினார்கள் என்று பார்த்தால் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவைகள்தான் பெரும்பாலும் தொடங்கி வைத்து ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.

இப்போது மாவட்டம் தோறும் செவிலியக்கல்லூரி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னை ஸ்டான்லி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகள் ஆகியவற்றீன் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. அதனை மீட்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுத்தது போல தெரியவில்லை.  இப்படி இருக்கிற விஷயங்களை காப்பாற்ற தெரியாமல் புதியதாக செய்கிறோம் என்று கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாகத்தான் திமுக செய்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version