கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்தும் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற காரும் வயலூர் என்னுமிடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது காரின் பின்னால் வந்த நகரப் பேருந்து காரின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாலையோரமாகப் பேருந்தை இயக்கினார். இருப்பினும் காரின் பக்கவாட்டில் நகரப் பேருந்து மோதியதுடன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் 3பேர் காயமடைந்தனர். அவர்களைப் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post