டிக் டாக் மோகத்தால் இரவு முழுவதும் நடு காட்டில் சிக்கித் தவித்த இளைஞரை ஆந்திர காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி என்பவர் திருப்பதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். டிக் டாக் செயலிக்கு அடிமையான முரளி, பல்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், டிக் டாக் வீடியோ எடுப்பதற்காக சேஷாசல காட்டுக்குள் சென்ற அவர், திரும்பி வர வழி தெரியாமல் நடு காட்டில் சிக்கித் தவித்தார். இதையடுத்து, இருக்கும் இடத்தை மொபைல் லொகேஷன் ஷேர் வாயிலாக நண்பர்களுக்கு முரளி தெரியப்படுத்தினார். அவர்கள் அளித்த தகவலின்பேரில் திருப்பதி காவல்துறையினர், காட்டுப்பகுதிக்குள் சென்று இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மறுநாள் காலை மயக்க நிலையில் இருந்த முரளியை கண்டுபிடித்த காவல்துறையினர், அவரை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.