ஈரோட்டில் இருந்து கோழித்தீவனம் ஏற்றிவந்த லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து லாரியை நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே குதித்து உயிர்தப்பிய ஓட்டுநர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். குமாரபாளையம், சங்ககிரி ஆகிய ஊர்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்துக் குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post