மக்களவை தேர்தல்: தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க.வை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர். இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதேபோன்று விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, மாவட்ட தேர்தல் அதிகாரி சிவஞானத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version