திருவாரூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரத்து760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 8கோடியே 85 லட்ச ரூபாய் தீர்வுத் தொகையாகப் பெறப்பட்டது.
திருவாரூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட நீதிபதி கலைமதி தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி, சார்பு நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, மொத்தம் நான்காயிரத்து 261 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு மற்றும் குடும்ப நல வழக்கு உட்பட, மொத்தம் ஆயிரத்து 760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் தீர்வுத் தொகையாக 8 கோடியே 85 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.
Discussion about this post