18 ஆயிரம் கோடி மின் நிலுவைத் தொகையை செலுத்தும்படி உள்ளாட்சி அமைப்புகளை தமிழ்நாடு மின்சார வாரியம் (Tangedco) கேட்டுக்கொண்டுள்ளது.
விடியா ஆட்சியில் அன்றாடச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல் நிதி நெருக்கடியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சிக்கித் தவித்து வருகிறது. இதனிடையே உள்ளாட்சி அமைப்புகளால் மின் நிலுவைத் தொகை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மின்சார வாரியம், கடந்த ஜூலை மாதம் வரை மட்டும் நிலுவைத் தொகை ஆயிரத்து 800 கோடியாக உள்ளதாக கூறியுள்ளது. அவற்றை வசூலிக்க அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமின்றி, குடிநீர் வாரியம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பள்ளிக்கல்வி மற்றும் காவல்துறை போன்ற பிற அரசுத் துறைகளிலும் நிலுவைத் தொகையை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.