தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று, ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post