சென்னையில் அங்கீகாரமின்றி செயல்பட்ட 331 பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரமின்றி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் 331 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அங்கீகாரமின்றி இப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version