திருப்பத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறானாளிகள் கணக்கெடுக்கும் பணி

திருப்பத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறானாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆணைக்கிணங்க, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறானாளிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. நரிக்குறவர்கள் அதிகமாக வாழக்கூடிய கல்லுவெட்டுமேடு என்ற பகுதியில் பள்ளிக்கு செல்லாத 50 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அப்பகுதி மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

Exit mobile version