கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த கடை அகற்றப்பட்டது. எனினும் அந்த கிராமத்தின் மையப் பகுதியில் தனியார் மதுபான விடுதி இயங்கி வருகிறது. இங்கு அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் பெருமாள் மலை பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் கொடைக்கானலில் ஏற்கனவே 8 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்திருப்பது, விடியா திமுக அரசின் அவலநிலையை எடுத்துரைத்துள்ளது.
புதிதாக மதுக்கடையை திறக்க கோரி, மதுப்பிரியர்கள் சாலை மறியல்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: block the roaddemandingLiquor loversnew liquor storeopening
Related Content
சபரிமலை கோவில் நடை திறப்பு..தேதி அறிவிப்பு!
By
Web team
February 9, 2023
பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம்! பெண்கள் சாலை மறியல்
By
Web team
January 31, 2023