தமிழகத்தின் ஒரிரு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து வரும் நிலையில், இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், நீலகிரி, விருதுநகர், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை , தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைபெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.