அமமுக கரூர் தொகுதி வேட்பாளர் பிரசாரத்தின் போது, பத்துக்கும் குறைவான தொண்டர்களே வாக்கு சேகரிக்க வந்த பரிதாபம் நேர்ந்துள்ளது. டிடிவி தினகரன் வழிநடத்தும் அமமுகவினருக்கு தொண்டர்களிடத்திலேயே போதிய ஆதரவு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர், பிரசாரத்தில் ஈடுபட்டபோது, வாக்குசேகரிக்க ஆளில்லாமல் தவித்தாகத்தெரிகிறது.
இதுகுறித்து வாக்குசேகரிக்க ஆட்களை அனுப்பும்படி வேட்பாளர், கட்சியினரிடம் கேட்டதற்கு ஆட்கள் இல்லை என அதன் முக்கியப்புள்ளிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வேறுவழியில்லாமல் குறைவான தொண்டர்களுடன் கரூர் தொகுதி அமமுக வேட்பாளர் வாக்குசேகரித்தார். இது பிறகட்சியினர் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Discussion about this post