வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டு, சட்டம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றமும் உள் ஒதுக்கீட்டிற்கு தடை ஏதும் விதிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையம், 6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் குறித்த அறிக்கையை அரசுக்கு அளித்தவுடன், அனைத்து சமுதாயத்திற்கும், மக்கள் தொகைக்கு ஏற்ப உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளதை அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். முதலமைச்சர் உறுதியளித்ததை போல், அனைத்து சமுதாயத்திற்கும் உள் ஒதுக்கீடு நிச்சயம் வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
Discussion about this post