விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகளான, பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முருகன், கலிய பெருமாள் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஜெயஸ்ரீயின் பெற்றோரிடம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார். மேலும், மாணவியின் பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். அப்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ் செல்வன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Discussion about this post