விடியா திமுக ஆட்சியில் தமிழக மக்களை அதிர வைக்கும் வகையில் கடந்த 10 நாட்களில் 23 கொலைகள் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ளது.சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளக் கூடிய ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்து வந்தது. ஆனால் இந்த விடியா திமுக, ஆட்சிக்கு வந்த 2 1/2 ஆண்டுகளில் தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ளது.
பத்து நாட்களில் கொலை செய்யப்பட்டவர்கள்…!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கால்நடைகளுக்கு தீவண புல் கொண்டு வந்த விவசாயியான சிவராமை வழிமறித்து மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது, திருச்சியில் குப்புசாமி என்பவர் தன்னுடைய மனைவி கண் முன்னே 6 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருச்சியில் பெயிண்டர் வேலை செய்து வந்த தீபக்கை கறிவிருந்திற்கு அழைத்து செல்லப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை பட்டா கத்தியுடன் வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையம் அருகே பட்டப்பகலில் ரவுடியான அப்பு என்கிற சதாம் உசேனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
சென்னை பாடிகுப்பத்தில் மந்திரவாதியாக இருந்து வந்த சிக்கந்தர் கஞ்சா வியாபாரியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியரும், பெண் காவலரின் தந்தையுமான செந்தில்வேல் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதேபோல் மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக கவுன்சிலரான சந்திரபாண்டியனை மர்மகும்பல் ஒன்று வழிமறித்து வெட்டிப்படுகொலை செய்தது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கூலி தொழிலாளி செல்வ திரவியத்தை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசியல் பிரமுகரை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது என அரசியல் வாதிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்களை குறி வைத்து தாக்கும் கொலையாளிகளை தண்டிக்க முடியாமல் காவல்துறையும், வேடிக்கை பார்க்கும் திமுக அரசாலும் மக்கள் அச்சமடைந்து இருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து 2 1/2 ஆண்டுகளில் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கை அச்சத்திலும், பதட்டத்திலும், குறிப்பாக பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுக எனும் திராவிட மாடலின் சித்தாந்தமா? எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர்.
Discussion about this post