ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி கடந்த ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான தேதி இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு அதாவது ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை கணக்கு தாக்கல் செய்ய 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி வரும் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version