தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் கல்வி தொலைக்காட்சியைக் காண்பதற்கான தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்படி முதல் கட்டமாக 9 ஆயிரத்து 542 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. 11 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தமிழக அரசு புதிதாக தொடங்கிய கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் அனைவரும் கண்டு பயன்பெறும் வகையில் 32 பள்ளிகளுக்கு 32 தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களையும் துணை முதலமைச்சர் வழங்கினார்.