மாற்றுத்திறனாளியின் நிலத்தில் திமுக பிரமுகர் திருட்டுத்தனமாக வேலியிட்டதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, மாற்றுத்திறனாளியின் நிலத்தில் திமுக பிரமுகர் திருட்டுத்தனமாக வேலியிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொக்கரசன்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஸ்டாலின் என்பவர், கூலி வேலை பார்த்துக் கொண்டு, தனது வயதான தாய், தந்தையை கவனித்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள அவரது காலி நிலத்தில், ராஜேந்திரபட்டினம் கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகரான தியாகராஜன் இரும்பு வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கேட்ட ஸ்டாலினை, தியாகராஜன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்டாலின், ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

மனுவில், தமது பூர்வீக இடத்தில் வேலி அமைத்துள்ள ஸ்டாலின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளார்.

திமுக பிரமுகரான தியாகராஜன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version