நில அபகரிப்பு… விடியா திமுகவிற்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

supreme-court

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. மேலும் இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன.

இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நில அபகரிப்பு சிறப்புப் பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் விசாரணை நடத்த தடை இல்லை என உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

இதற்கிடையில் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனது நிலஅபகரிப்பு தொடர்பான வழக்கு நெடு நாட்களாக நிலுவையில் இருப்பதாகவும் அந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்சங்கர் என்பவர் மூலமாக தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி எம் ஆர் ஷா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா அப்படி செயல்படுகிறது என்றால் எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கிறது ஏன் இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவில்லை என பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நிலப் பிரச்சனைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது எனக் கூறியதோடு, தமிழ்நாட்டில் நிலப்பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பான தனிச்சட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்

ஆந்திர மாநிலத்தின் இருப்பது போன்று தமிழ்நாட்டிலும் நில அபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை முடித்து வைத்தனர்.

Exit mobile version