கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக 4 வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத், டிசம்பர் முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மத்திய சிறையில் உள்ளார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 4 வழக்குகளில் ஒரு வழக்கில் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 3 வழக்குகளில் ஜாமின் கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு மனுத்தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை கடந்த ஜனவரி 10ம் தேதி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் லாலு மேல்முறையீடு செய்தார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், லாலு பிரசாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post