சென்னை கொரட்டூரில் நடந்த ஏரி பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை கொரட்டூர் பகுதியில் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமானோர் இணைந்து ஏரிக்கரையில் பொங்கல் வைத்தனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரங்கோலி போட்டியில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களை வண்ணங்கள் மூலம் வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் பாரம்பரிய கலைகளாக தப்பாட்டம், பொம்மலாட்டம் மற்றும் தோல்பாவைக்கூத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இயற்கை உணவு மற்றும் இயற்கை பொருட்கள் விற்பனை என ஏரிக்கரை விழாக்கோலம் பூண்டது. இதில் ஏராளமானோர் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.
Discussion about this post