தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாலூட்டும் தாய்மார்களின் நலன் கருதி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட பாலூட்டும் அறைகள், தற்போது மது அருந்தும் கூடாராமாக மாறியுள்ளதாகவும், இதனை அரசியல் காழ்புணர்ச்சியால் விடியா திமுக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பராமரிப்பு இன்றி இருக்கும் பாலூட்டும் அறைகள்!
பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு எவ்வித இடையூறும் இன்றி தனிமையில் பாலூட்டும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இந்த அறையில் இருக்கைகள், மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த திட்டத்திற்கு பாலூட்டும் தாய்மார்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். ஆனால், விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக,மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை பராமரிப்பின்றி காணப்படுகிறது.
மதுக்கூடாரமாக மாறிவரும் பாலூட்டும் அறைகள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அங்கிருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை விடியா திமுக அரசு மூடியுள்ளது. மேலும் இந்த அறையை கட்டிட பணியாளர்கள் தங்கும் இடமாகவும், உணவு சமைத்து சாப்பிடும் இடமாகவும் மாற்றியுள்ளனர்.இதே போல் சேலம் மாவட்டம் மேட்டூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை முறையாக பராமரிக்க படாததால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பாலூட்டும் அறையும் கடந்த 2 ஆண்டுகளாக முறையாக பராமரிக்க படாததால் மது அருந்தும் கூடாரமாக மாறி உள்ளது.
பிறந்த குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தாய்பாலை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தாயுள்ளத்தோடு புரட்சி தலைவி இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தினார். ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பாலூட்டும் அறைகளை, முறையாக பராமரிக்காத விடியா திமுக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.