கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுமார் 22கோடி ரூபாய் செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு தேவையான ஐந்தரை ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திர நிர்வாகம் நன்கொடையாக வழங்கியது. 2013-ம் ஆண்டு கோவில் கட்டும் பணி தொடங்கியது. கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு சூரிய ஒளி விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுப்ரபாதத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. காலை 9 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post