குமரிக் கடல் பகுதியில் கடும் சூறைக் காற்று வீசுவதால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டல் துறைமுகங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், குமரிக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல், படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.