கிருஷ்ணகிரியில் மழை வேண்டி கிராம மக்கள் விநோத வழிபாடு

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மேடுகம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மழை வேண்டி வனப்பகுதியில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிகாலையிலே வீடுகளைக் காலி செய்து வனப்பகுதிக்குள் சென்றனர். வனப்பகுதியில் ஒன்றாக இணைந்து பொங்கலிட்ட அவர்கள் அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். இவ்வாறு வழிபாடு நடத்துவதால் குறைகள் நீங்கி மழை வளம் கொழிக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த 30 வருடங்களுக்கு முன் நிலவிய வறட்சி காரணமாக நடத்தப்பட்ட வழிபாடு, இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version