தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 60 ஆண்டு காலமாக நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் துவங்கியுள்ளது.
கோவில்பட்டி, செவல்குளம் நீரோடையில் செண்பகவல்லி அம்மன் கோயில் பயன்பாட்டில் 106 கடைகளும், தனியார் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கட்டப்பட்டு இருந்தன. இதில் கடை உரிமையாளர்கள் ஓடையில் கான்கிரீட் தூண்கள்
எழுப்பி தங்களது வசதிக்கு தக்கவாறு கடைகளை மாற்றி அமைத்துக் கொண்டதால், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கோட்டாட்சியர் விஜயா, தலைமையில், அரசு அதிகாரிகள், தீயணைப்புத் துறை அதிகாரிகள், மற்றும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆகியோரின் முன்னிலையில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறாத 13 கடைகள் இடிக்கப்பட்டன.
Discussion about this post