ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்த போது, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 2 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களின் புகைப்படத்திற்கும், தோற்றத்துக்கும் மாறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம், ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் மட்டுமே எழுந்துள்ளது எனவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
Discussion about this post