கோவை மேயர் மீது குவியும் புகார்கள்! மாற்று கட்சி கவுன்சிலர்கள் அடுக்கடுக்காக புகார்! பேரம் பேசிய அமைச்சர்கள்!

கோவை மேயர் மீது திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்களை வாசித்து வருகின்றனர். மேயர் மீதான புகார்கள் வெளியே கசியாமல் இருக்க கூட்டணி கட்சி கவுன்சிலர்களுடன் திமுக அமைச்சர்கள் பேரம் பேசி வருகின்றனர்… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…

கோவையில் மேயராக இருப்பவர் கல்பனா. இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான இவர், செந்தில் பாலாஜி இருந்த வரையில் அவரது பெயரை சொல்லி இல்லாத அட்ராசிட்டிகளில் ஈடுபட்டு வந்தார் கல்பனா. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தற்போது தனிக்காட்டு ராணி போல வரும் வருகிறார். மாநகராட்சிப் பணிகளுக்கு டெண்டர் விடுவதில் இருந்து அனைத்து பணிகளிலும் கமிஷன் பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளார். குறிப்பாக திமுக கவுன்சிலர்களையும், கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களையும், கட்சியின் மூத்த உறுப்பினர்களையும் மதிக்காமல் சுற்றி வருகிறாராம். இதனால் விடியா திமுகவின் உள்ளூர் நிர்வாகிகளே கல்பனா மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.

கட்சியின் சீனியர் அமைச்சர் நேரு கூறிய பிறகும் கூட கோவை வஉசி பூங்காவில் நடைபெற உள்ள பொருட்காட்சி டெண்டரில் கையெழுத்திட மறுப்பதாக கூறி, சமீபத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத் தொடரில் இருந்து திமுக மண்டல தலைவர் மீனாலோகு வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருபுறம் கலெக்சன் ராணியாக வலம் வரும் மேயர் கல்பனா, மறுபுறம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அடாவடித் தனத்தில் ஈடுபடுகிறார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதிகாரத்தைக் காட்டி மிரட்டி தனது வீட்டின் அருகே இருப்பவர்களை மிரட்டுதல், அவர்களை காலி செய்ய வற்புறுத்துதல் உள்ளிட்ட வேலைகளில் கல்பனா ஈடுபட்டு வருகிறாராம்.

இந்நிலையில் அண்மையில் கோவைக்கு வந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோரை நேரில் சந்தித்த திமுகவினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இரவு 8 மணிக்கு அவர்களைச் சந்தித்தனர் அமைச்சர்கள். நள்ளிரவு இரண்டரை மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் என வரிசையாக ஒவ்வொருவரும் வந்து மேயர் கல்பனா மீது அடுக்கடுக்கான புகார்களை குவித்துள்ளனர். புகார்களைக் கேட்டு ஆடிப்போன அமைச்சர்கள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதையெல்லாம் பெருசுபடுத்த வேண்டாம் என கெஞ்சிக் கூத்தாடி, ஒவ்வொருவருக்கும் அவர்களது குறைகளுக்கு ஏற்ப லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து செட்டில் செய்துள்ளதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன. இதையடுத்து மேயர் கல்பனாவையும் அழைத்து டோஸ் விட்டுள்ளனர் அமைச்சர்கள்.

இனியாவது கோவை மேயர் கல்பனா தனது கலக்சன், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பாரா என திமுகவினரும், கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களும் காத்திருக்கின்றனர்…

Exit mobile version