கொரிய ஓபன் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவைல் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
தென் கொரியாவில், சூப்பர்-500 அந்தஸ்து பெற்ற கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியன், முகமது ரியான் ஆர்டியண்டோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட் கணக்கில் 17-21 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-13 என்று கைப்பற்றியது. மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய நமது இந்திய ஜோடி 21-14 என தன்வசப்படுத்தியது. முடிவில் சாத்வி, சிராக் ஜோடி 17-21, 21-13, 21-14 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் கொரிய ஓபன் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்திய ஜோடியானது சாத்விக்-சிராக் ஜோடி.
இது தவிர, சாத்விக்-சிராக் ஜோடி நடப்பு சீசனில் நான்காவது பட்டம் வென்றுள்ளது. ஆசிய சாம்பியன்ஷிப், சுவிட்சர்லாந்து ஓபன், இந்தோனேசியா ஓபன் சாம்பியன் பட்டம் போன்ற கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.