கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துகின்றனர் – அமைச்சர் தங்கமணி

அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தவே கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 200 பயனாளிகளுக்கு, கோழிக் குஞ்சுகளை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 3 ஆயிரம் பேருக்கு ஒன்றரை லட்சம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி புரிந்து வருவதாகவும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே சதித்திட்டம் தீட்டி, கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது வீண் பழி சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

Exit mobile version