நாயகன் அடிபணிந்தார் எட்டுத்திக்கும் சிரிப்புதானே.. திமுகவிடம் அடிபணிந்துவிட்ட கமல்!

நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் உரிமைக்குரல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி அவர்கள், விஸ்வரூபம் படம் வெளியீட்டுப் பிரச்சினைக்கு புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள்தான் காரணம் என்று பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவும், காங்கிரஸ் வேட்பாளரை திடீரென்று ஆதரிக்கும் கமலின் அரசியல் பிண்ணனிக் குறித்தும் கருத்துக்கள் பகிர்ந்துள்ளார். அதனைப் பின்வருமாறு காண்போம்.

கிஷோர் கே சுவாமி :

பரமக்குடி பார்த்தசாரதி என்கிற கமலஹாசனின் தந்தை சீனிவாச அய்யங்கார் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக பரமகுடி தொகுதியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்கிறார். அந்த விண்ணப்பம் காங்கிரஸ் தரப்பால், முக்கியமாக பெருந்தலைவர் காமராசர் அவர்களால் நிராகரிக்கப்பட்டது. இதனால் காங்கிரசிற்கும் கமலஹாசன் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினைத் தொடங்கிவிட்டது. அதனால் அறிஞர் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் உருவான ரெயின்போ கூட்டணியை சீனிவாசன் ஆதரித்தார். காமராசரை வீழ்த்த வேண்டும் என்று அந்தக் கூட்டணி உருவானது. அண்ணாதுரை காமராசரை எதிர்க்க சில அரசியல் காரணங்கள் உண்டு. குறிப்பாக சமூகநீதி, இந்தி எதிர்ப்பு போன்ற காரணங்கள் பலமாக இருந்தன. ஆனால் கமலஹாசனின் குடும்பத்திற்கு சுயநலம் மட்டும் தான் இருந்தது. அவர்களுக்கு காமராசரை வீழ்த்த வேண்டும் அவ்வளவுதான். ஐந்து கட்டமாக அந்த தேர்தல் நடைபெற்றது. ஐந்தாம் கட்ட வாக்கெடுப்பு 1967ஆம் ஆண்டு பிப்ரவரி 21ல் நடைபெற்றது. இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் கமலின் மக்கள் நீதி மைய்யம் பிப்ரவரி 21, 2018ல் தொடங்கப்பட்டது. அதாவது காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது என்கிற எண்ணம் இவரது ஆழ்மனதிற்குள் இருக்கிறது. இப்போது காங்கிரசிற்கு ஆதரவாக பேசிக்கொண்டிருக்கிறார்.

அதேபோல அதிமுகவிற்கும் கமலிற்கும் உள்ள தொடர்பு என்று நாம் பார்த்துக்கொண்டால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கமலஹாசனின் இரசிகர் மன்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதனைக் கமல் எப்படி திரித்துக் கூறிகிறார் என்றால் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார் என்று கமல் பேசியுள்ளார். அந்தக் கூட்டத்தில் பேசிய மக்கள் திலகம் அவர்கள் ‘தாமரை இலையில் தண்ணீர்த் துளிகள் அங்குமிங்கும் உருளும், சூரிய ஒளிப்பட்டு வர்ணஜாலங்களைக் காட்டும். ஆனால்ன் தாமரை இலைகளில் ஒட்டாது. அதுபோலத்தான் நடிகர்கள் தங்களுடைய நடிப்பைக் காட்ட வேண்டும்’ என்று பேசியிருந்தார். அன்றைக்கே எம்.ஜி.ஆர் அவர்கள் கமலைக் கணித்திருக்கிறார். மக்கள் திலகம் ஒரு தீர்க்கத்தரிசி.

கமல் சாதி என்பதே இருக்கக்கூடாது என்று பேசுவார். ஆனால் தேவர் மகன் என்று படம் எடுப்பார். 2004 வாக்கில் சண்டியர் என்று படம் எடுத்தார். அந்தப் படத்தில் பெயரிலேயே சர்ச்சை இருந்தது. அதனால் செல்வி ஜெயலலிதா அவர்களை சந்தித்தார் கமல். பிறகு செய்திகளில் விளம்பரங்களைக் கொடுத்தார். செல்வி ஜெயலலிதா அவர்களை சந்தித்தேன் அவர் எனக்கு சரியான அறிவுரைகளைக் கூறினார் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி என்று கமல் அந்த விளம்பரங்களில் கூறியிருந்தார். தற்போது வெட்கம் இல்லாமல் நன்றியை மறந்து கமல் பேசிவருகிறார் என்று கிஷோர் கே சுவாமி அவர்கள் குறிப்பிட்டார்.

(தொடரும்…)

Exit mobile version