பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீண்டும் விடுத்த அழைப்பு முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றுள்ளார்.
புதுச்சேரி அரசின் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி காலம் தாழ்த்தி வருவதாக கூறி துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு மாநில முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அண்மையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாராயணசாமிக்கு கிரண் பேடி அழைப்புவிடுத்தார். ஆனால் நாராணயசாமி சில நிபந்தனைகளை முன்வைத்ததால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்தநிலையில், நிபந்தனைகளை ஏற்ற கிரண் பேடி, இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்புவிடுத்தார். அதன்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையின் முதலமைச்சர் நாராணயசாமி தலைமையில் மாநில அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். அப்போது 39 கோரிக்கைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post