45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த வரலாறு காணத மழையால் 49 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் பருவமழை புரட்டி எடுத்து வருகிறது. 6 நாட்களாக இரவு, பகலாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வீடுகள், சாலைகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், ரயில், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சுவர் இடிந்தது உள்பட பல்வேறு காரணங்களில் 47 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே மகாராஷ்டிராவில் உள்ள திவாரி அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ரத்னகிர் பகுதி ஆறு ஓரமாக இருந்த 12 குடிசைகள் அடித்து செல்லப்பட்டது. இதில் 2 இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் மாயமாகியுள்ளனர். பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.