பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தளபதி 64 படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கலும் ஒரு பக்கம் வந்துக்கொண்டிருக்கிறது.தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, 96 படத்தில் ஜானுவாக நடித்த கௌரி, VJ ரம்யா ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.தளபதி 64 படத்தின் படபிடிப்பு 20 நாட்களாக டெல்லியில் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் படப்பிடிப்பிற்கு சென்ற சாந்தனு இடைவேளியில் மனைவியுடன் டூயட் பாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் சாந்தனு கிகியை தனது மும்தாஜ் என கூறி ‘பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்’ என பாட, கிகியோ அதற்கு வெட்கப்பட்டு சிரிக்கிறார்.சாந்தனு பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தளபதி 64 திரைப்படம் 2020 ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
In between shoots of #Thalapathy64
What I thought will be a romantic trip to Agra #TajMahalAs usual I try to impress @KikiVijay … and she gives me a “Bulbbuu” … PERIOD ??? pic.twitter.com/qjsMd27tue
— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) November 10, 2019
Discussion about this post