அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. அண்மையில்,அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்1பி விசாவுக்கான விதிமுறைகளை கடுமையானதாக மாற்றினார்.
இது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில், டிரம்பின் நிர்வாகம் விதிமுறைகளை தீவிரப்படுத்தியது. இது தொடர்பாக ஐடி நிறுவனங்கள் 2 முறை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், எச்1 பி விசா பெறுவதற்கான வரையறைகளை, அமெரிக்க குடிபெயர்வுத்துறை மாற்றியமைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மற்றும் மிகத்திறமையான வெளிநாட்டவர்கள் எச்1 பி விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும் ஊதிய விகிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post