விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து மதுரை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து பயணிகளைக் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல் நிலையம் அருகில் லாரி ஒன்று வளைவில் வளையும் போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியும், பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர். விபத்தில் பேருந்தில் வந்த 3 பேரும், லாரியில் இருந்த ஒருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த 23 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர்த் தப்பினர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடல் முழுவதும் கருகியதால் இறந்தவர்களின் விபரங்களை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post