கேரள மாநிலம் மலப்புரத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பறவை கூடுகள் நிறைந்த மரம் வெட்டப்பட்ட நிலையில், பல பறவைகள் தரையில் விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் காண்போர் மனதை கனக்கச் செய்துள்ளது.
சாலை ஓரம் இருந்த அந்த பெரிய மரத்தில் அதிக அளவிலான பறவைகள் கூடுகள் அமைத்து அடைகாத்து வந்த நிலையில், பறவைகளை இடம் மாற்ற எந்த விதமான முன்னேற்பாடுகளையும் செய்யாமல் மரத்தை வெட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளுக்கு பொது மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சாலை ஒப்பந்ததாரர் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
Discussion about this post