ஆன்லைன் புக்கிங் ரத்து: அனைத்து சுற்றுலா தலங்களை மூட கேரள அரசு உத்தரவு!

கேரளாவில் பத்தனம்திட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 149-பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் 7-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்களை முறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகளவு வெளிநாட்டு பயணிகள் வருவதை முறைப்படுத்த, கடந்த 10-நாட்களுக்கும் மேலாக ஆன்லைன் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மாட்டுப்பட்டி அணை, ராஜமலை, குண்டலை, ஆத்துக்காடு, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Exit mobile version