சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து பிராமணர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து, கேரள பிராமணர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து.

இதனையடுத்து தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு என்ற வேண்டுகோளை கேரள அரசு நிராகரித்து விட்டது. இதனிடையே, சபரிமலைக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தியதால் கேரளாவில் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version