பிக்பாஸ் வீட்டில் நண்பனிடம் பளார் அறை வாங்கிய கவின்..

இன்று பிக்பாஸ் விட்டில் 82 வது நாள்.தினமும் போட்டியாளர்களுக்கு நெருங்கியவர்கள் வீட்டிற்குள் வந்து அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி செல்கின்றனர்.

இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் கவினின் நண்பன் வீட்டிற்கு வருகிறார்.லிவ்விங் ஏரியாவில் அனைவரும் அமர்ந்திருக்கையில் கவினின் நண்பனோ’இவளோ கேவலமா நீ விளையாடுன விளையாட்டுக்கு, நீ வந்து மட்டமாக ஒரு விஷயம் பண்ணதுக்கு,உன்ன நம்புனவங்கள கை விட்டத்துக்கு, இங்க இருக்க எல்லாரையும் hurt பண்ணதுக்கு, நான் இப்ப ஒன்னு செய்யலாம்-னு இருக்கேன்.டைட்டில் ஜெயிச்சுட்டு நீ பெரிய ஆள் ஆயிட்டீனா, என்ன stage-ல வந்து நீ அடிச்சுக்கோ என கூறிவிட்டு கவினின் கன்னத்தில் பளார் என அறைகிறார்.வீட்டில் உள்ளவர்களோ என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் பார்க்கின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவருமே எதிர்பார்த்த சாண்டியின் லாலா வீட்டிற்கு வருகிறார்.சாண்டியின் மகளோ, சாண்டி அடிக்கடி சொல்லும் குருநாதா என்ற வார்த்தை அணிந்த t shirt -ஐ அணிந்து கொண்டு உள்ளே வருகிறார்.அதனைக் கண்ட சாண்டி ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அழுகிறார்.அனைவரும் லாலாவை கொஞ்சிக்கொண்டு விளையாடுகின்றனர்.இன்றைய பிக்பாஸ் வீடு வழக்கம் போல் இல்லாமல், சற்று மாறுப்பட்டதாகவே இருக்கிறது.

Exit mobile version