ஆந்திரா மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தரக் கோரி காசிமேடு மீனவர்கள் பூக்கடை சரக உதவி ஆணையரிடம் மனு அளித்தனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி 4 விசைப்படகுகளில் 35 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆந்திர மாநிலக் கடற்கரைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளில் ஒரு படகைக் கொண்டு மற்றொரு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் படகில் மோதி சேதப்படுத்தினர். சேதமடைந்த படகை அப்பகுதியிலேயே விட்டுச் சென்ற அவர்கள் 3 படகுகள் மற்றும் 24 மீனவர்களை சிறை பிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 24 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்டுத் தரக்கோரி காசிமேடு மீனவர்கள் பூக்கடை சரக உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். கோரிக்கை மனுக்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post